கவர்ச்சி நடிகையுடன் ஜோடி போடும் சிவகார்த்திகேயன்!

மாவீரன் படத்திற்கு பிறகு அடுத்ததாக சிவகார்த்திகேயன் பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கான முதல் கட்டப் பணிகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் யார் கதாநாயகி என தெரிந்ததும் ரசிகர்கள் பயங்கர அப்சட்டில் இருக்கின்றனர்.
ஏனென்றால் சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் கூட நடிக்கும் கதாநாயகியை பார்த்து பார்த்து தேர்வு செய்வார். அந்த வகையில் இவர் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரை தான் கதாநாயகியாக தேர்வு செய்திருக்கின்றனர்.
இவர் என்னதான் பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது தென்னிந்திய சினிமா தான். கடந்த ஆண்டு தெலுங்கில் ரிலீசான சீதாராமன் என்ற படத்தில் துல்கர் சல்மான் உடன் ஜோடியாக மகாலட்சுமி என்ற கேரக்டரில் மிருணாள் தாக்கூர் நடித்து அசத்தி இருந்தார்.
படம் முழுக்க சேலை, பாவாடை தாவணியில் பக்கா குடும்ப பெண்ணாக நடித்த மிருணாள் தாக்கூர் சமீப காலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐட்டம் நடிகைகளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் கை மேல் கிடைத்த பலனாய் நெட்பிளிக்ஸில் தற்போது ரிலீசாகி இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற ஆந்தாலஜி படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் மட்டுமல்ல தமன்னா, தபு ஆகியோரும் கவர்ச்சி தூக்கலாக நடித்திருக்கின்றனர்.
இதில் வரும் படுக்கையறை காட்சிகள் மற்றும் முத்த காட்சிகளில் படுமோசமாக நடித்திருக்கும் மிருணாள் தாக்கூரை பார்க்கும்போது சீதாராமன் நடிகையா இவர் என பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. செம ஹோம்லி லுக்கில் இருக்கக்கூடிய இவர், இந்தப் படத்தில் வரும் காட்சியில், ஹோட்டலில் ரூம் ரூமாக தனது வருங்கால கணவருடன் சென்று ஒரு பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி நடித்திருப்பதை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விட்டனர்.
‘போயும் போயும் அப்படிப்பட்ட நடிகையுடனா சிவகார்த்திகேயன் அடுத்து ஜோடி போட போகிறார். உங்க கேரியரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என அபாய சங்கு ஊதுகின்றனர். மேலும் ஏஆர் முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எனவே தரமான கூட்டணியாக இருக்கக்கூடிய இந்த படத்தின் கதாநாயகியை மட்டும் தயவுசெய்து மாற்றினால் உங்களுக்கு நல்லது என இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்டை தெறிக்க விடுகின்றனர்.