கிரிக்கெட் கடவுள் விராட் கோலி !!50 வது சதத்தை அடித்துத்தூக்கிய விராட் – கொண்டாடும் ரசிகர்கள்…


உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் இந்திய அணிக்கு ரோகித்சர்மா அபாரமான தொடக்கம் அளித்தார்.
சதத்தை நோக்கி ஆடிய சுப்மன்கில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அபாரமாக ஆடினார், நிதானமாகவும், அதேசமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விளாசிய விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 50வது சதத்தை விளாசினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலே அதிக சதம் விளாசிய வீரர் என்ற கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். யாராலும் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் சாதனையை மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி முறியடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.