குட்டி குந்தவை இந்த பிரபலங்களின் மகளா.?தீயாய் பரவும் தகவல்.!


‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இளம் வயது குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் பாகத்தினை போல் இந்த பாகமும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் எக்கச்சக்கமான பிரபலங்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொருவராக தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்தப்படத்தில் இளம் வயது குந்தவையாக நடித்தவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவான படம் ‘பொன்னியின் செல்வன்’. எழுத்தாளர் கல்கியின் பிரபலமான நாவலை அதே பெயரில் படமாக்கியுள்ளார்.
இந்த நாவலை படமாக்க எம்ஜிஆர் துவங்கி பலரும் விரும்பினாலும் சாத்தியமாக்கியது என்னவோ மணிரத்னம் தான். இதனால் கோலிவுட் சினிமாவே அவரை கொண்டாடி தீர்த்து வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் வெளியாகியிருந்தது.
பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்தது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலனாக விகாரம், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா, குந்தவையாக திரிஷா, இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ரகுமான் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் இளம் வயது நந்தினியாக பேபி சாரா கவனம் ஈர்த்தும் வரும் நிலையில் இளம் வயது குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தின் சிறு வயது கேரக்டரில் நடித்துள்ளவர் நிலா. இவர் ‘தெய்வம் தந்த வீடு’ மற்றும் ‘அன்பே வா’ போன்ற பிரபலமான சீரியலில் நடித்துள்ள கனியா பாரதியின் மகள் தானாம். கனியா பாரதி மேலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நிலாவின் தந்தை பாரதியும் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனையடுத்து நிலா தனது பெற்றோர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்தில் நாவலில் உள்ள பலவற்றை மணிரத்னம் மாற்றியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆதித்ய கரிகாலனின் மரணம் தொடர்பான உண்மையை மறைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வசூல் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது