குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு..லைக்ஸ் வாரி குவித்த நடிகை!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை தனக்கு குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தி, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ’கபாலி’ படத்திற்கு முன்பே, அவர் பிரகாஷ்ராஜ் நடித்த ’தோனி’ கார்த்தி நடித்த ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராதிகா ஆப்தே கடந்த சில ஆண்டுகளாக முழுக்க முழுக்க ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், ஒரு சில ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் பெனடிக் டைலரை காதலிப்பதாக கூறிய ராதிகா ஆப்தே, அவரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததாக கூறியுள்ள ராதிகா ஆப்தே, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.