கெட்ட கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்!
இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அவசியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. அத்துடன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவு ஊட்டசத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றது. அழற்சி பிரச்சினையுள்ளவர்கள் மா இலையில் கை வைத்தியம் செய்து பார்க்கலாம். ஏனெனின் மா இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அந்த வகையில் மா இலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஆற்றல் கொண்ட மா இலைகள் இரத்த அழுத்தம் பிரச்சினையை குறைக்கின்றது. அத்துடன் இரத்த நாளங்களை வலுவாக்கி இதயம் சார்ந்த பிரச்சினைகளை சரிச் செய்கிறது.
2. மா இலையில் உள்ள வைட்டமின் சி, ஏ சத்துக்கள் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றது. மா இலைகளை ஒன்றாக சேர்த்து சுத்தம் செய்த பின்னர் கலவையை அரைத்து தலைக்கு போட்டால் ஒரே மாதத்தில் பலன் பார்க்கலாம்.
3. மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினையுள்ளவர்கள் உணவுடன் சேர்த்து மா இலைகளை எடுத்து கொள்ளலாம். இதனால் உங்களின் செரிமான சிக்கல்கள் குறையும்.
4. கீல் வாத வலியுள்ளவர்கள் தேநீராக செய்து குடிக்கலாம் அல்லது பச்சயம் செய்து கால்களுக்கு போடலாம். இப்படி என்ன முறையில் செய்தாலும் மா இலைகள் இயற்கையான வலி நிவாரணியாக இருந்து வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.
5. தீக்காயங்கள், தடிப்புகள் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மா இலைகளை கொண்டு கை மருந்து செய்து போடலாம். இது சருமத்திலுள்ள பாக்டிரியாக்களை நீக்கும்.