கேம் விளையாடிய 11 வயது மகனை கொன்ற தாய், உடலை மறைத்து வைத்து தாய் செய்த வேலை !!

July 10, 2020 at 2:49 pm
pc

மகன் இரவு பகல் எனப்பாராமல் மகன் செல்போனில் கேம் விளையாடக்கூடாது என கூறி ஆத்திரத்தில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 33 வயதான அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி என்ற பெண்மணி திருமணமாகி விவகாரத்தானவர். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் 11 வயதுடைய ரஃபேல் என்னும் 10 நாட்களாக காணவில்லை மேலும் இதுபற்றிய புகாரையும் அலெக்ஸாண்ட்ரா போலீசாரிடம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தான் அலெக்ஸாண்ட்ராவின் வீட்டின் கேரேஜில் (வாகனங்கள் பழுதுபார்க்கும் இடம்) இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேரேஜில் இருந்த அழுகிய சடலத்தை மீட்டு ஒருவாரமாக விசாரணை நடத்தினர். அதன் பிறகுதான் இறந்த சடலம் சிறுவன் ரஃபேல் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரஃபேல் தாய் அலெக்ஸாண்ட்ராவிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்துள்ளார். மேலும் தன் நடத்தையில் சந்தேகம் அடைந்து வாக்குவாதத்தில் மகன் வீட்டை விட்டு சென்று விட்டான் எனக்கூறி, போலீசாரின் விசாரணையை திசை திருப்ப முயன்றார்.

வீட்டிற்கு அருகிலுள்ள காட்டில், ஸ்னிஃபர் நாய்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.

மகனின் சடலத்தை ஓர் அட்டை பெட்டியில் பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தார். பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வீட்டின் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில கொண்டு சென்று அட்டை பெட்டியில் மறைத்து வைத்துவிட்டார்.

10 நாட்களுக்கு பின் அழுகிய சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசவே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது தாயை பற்றி போற்றி அந்த சிறுவன் ஏற்கனவே போனில் ஒரு கவிதை எழுதியிருப்பதாக போலீசார் தாயிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை அதிலேயே கழிக்கின்றனர். மேலும் இந்த வீடியோ கேம் அவரது வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது.

குழந்தை வளர்ப்பதில் பெற்றோர்கள் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டுவதும் மொபைல் போனை காட்டி சோறு ஊட்டுவதும் இவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website