கொந்தளித்த அமலா! அமைச்சர் மாதிரி பேசு.. அரக்கி மாதிரி பேசாத.. நாக சைதன்யா – சமந்தா விவகாரம்..


தெலங்கானாவின் முன்னாள் அமைச்சர் மகனுடன் நடிகை சமந்தாவுக்கு தொடர்பு இருந்தது தான் நாக சைதன்யா அவரை விவாகரத்து செய்ய காரணமே என பெண் அமைச்சர் கொண்டா சுரேகா நேற்று பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சரின் பேச்சுக்கு நாகார்ஜுனா, நாக சைதன்யா, ஜூனியர் என்டிஆர், நானி உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாகார்ஜுனாவின் மனைவி அமலா அக்கினேனியும் அமைச்சர் கொண்டா சுரேகாவை அரக்கி என்று ஆவேசத்துடன் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலியல் தொல்லை புகார்: கேரள சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் இளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வருவதாக ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. டோலிவுட்டிலும் அதே போன்ற விஷயத்தை செய்ய வேண்டும் என முதல் ஆளாக குரல் கொடுத்த நடிகை சமந்தா மீதே இப்படியொரு அவதூறு பழியை அமைச்சர் கொண்டா சுரேகா கிளப்பியுள்ள நிலையில், #FilmIndustryWillNotTolerate மற்றும் #SamanthaRuthPrabhu ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சமந்தாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
உடைந்து போன சமந்தா: காதலித்த நாக சைதன்யாவை பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா அரிய வகை நோய் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி ஏற்கனவே உடைந்து போயுள்ளார். அவரை மேலும், முழுவதுமாக காயப்படுத்தும் வகையில் அமைச்சர் மகனுடன் தொடர்பு படுத்தி எப்படி பேசலாம் என தெலுங்கு சினிமா திரையுலகமே வரிந்துக்கட்டிக் கொண்டு விளாசி வருகின்றனர்.
அமலா அக்கினேனி ஆவேசம்: நாகார்ஜுனா, நாக சைதன்யா, நானி, சமந்தா மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து தொடர்பாக கொண்டா சுரேகா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நடிகை அமலா அக்கினேனி தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் அமைச்சர் இப்படி அரக்கி போல பேசலாமா? காஞ்சுரிங் பேய் போல பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு பெண் மீது எப்படி சுமத்தலாம் என காட்டமான வார்த்தைகளால் அமைச்சரை வெளுத்து வாங்கியுள்ளார்.
தனது குடும்பத்தை பற்றியும் தனது கணவர் பற்றியும் கூட கொண்டா சுரேகா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார். ராகுல் காந்தி ஜி தயவு செய்து இந்த அமைச்சரை உங்கள் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெண்களுக்கும் டீசன்ட்டான குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் இந்த பிறவிகளை மன்னிக்கவே கூடாது என ராகுல் காந்திக்கே டேக் செய்து விளாசி எடுத்துள்ளார்.
வெடித்த சர்ச்சை: பெண் அமைச்சருக்கு எதிராக தெலங்கானாவில் இப்படியொரு பஞ்சாயத்து பெரிதாக வெடித்துள்ள நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கொண்டா சுரேகா மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் சமந்தா ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் பிரபலங்களுடன் நடிகைகளை சேர்த்து வைத்து பேசுவதை எப்போதுதான் இந்த அரசியல்வாதிகள் நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை என ஏகப்பட்ட ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சமந்தா பற்றி கொண்டா சுரேகா பேசியது தெலங்கானாவில் மிகப்பெரிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.