சகோதரியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற அண்ணன்: சொன்ன அதிர்ச்சி காரணம்!
அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த தன் சகோதரி கர்ப்பமுற்றதால், ஆத்திரத்தில் நான்கு மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை, துண்டு துண்டாக வெட்டி வீசினார் ஒரு அமெரிக்கர். வேடிக்கை என்னவென்றால், அவர் அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரிக்கு வயது30!
அமெரிக்காவின் மினசோட்டாவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த தன் மகள் வீட்டில் இரத்த ஆறு ஓடுவதாகவும், தன் மகள் உயிரிழந்திருக்கக்கூடும் என தான் கருதுவதாகவும் பொலிசாருக்கு தகவலளித்தார் ஒரு பெண்.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் இரத்த ஆறு ஓடுவதையு, இரத்தக்கரை படிந்த ஒரு அரம், பட்டாக்கத்தி மற்றும் பெரிய பெரிய கத்திகள் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
அத்துடன், வீட்டுக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பதையும், கூடவே சில கடிதங்கள் கிடப்பதையும் கண்டுள்ளார்கள். அந்தக் கடிதத்தில், கொலை செய்யப்பட்ட பெண்ணான பெத்தனியை (Bethany Ann Israel, 30) ஒரு அறியாச்சிறுமி என தான் நம்பியதாகவும், ஆனால், அவரோ கர்ப்பமுற்றுவிட்டதாகவும், அதனால் தான் ஆத்திரமடைந்ததாகவும் எழுதிவைத்திருந்தார், பெத்தனியின் சகோதரரான ஜாக் (Jack Joseph Ball, 23).
நான்கு மாத கர்ப்பிணி என்றும் பாராமல், தன் சகோதரியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய ஜாக்கைத் தேடினால், அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு காயத்துடன் ஓரிடத்தில் அமர்ந்திருந்திருக்கிறார் அவர். அத்துடன், வேறு பல இடங்களிலும் பெத்தனியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெத்தனியின் கணவரான ஜோஷ் (Josh), ஒரே நேரத்தில் மனைவியையும் பிள்ளையையும் இழந்து கண்ணீர் வடித்துவருகிறார். ஜாக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.