சமந்தாவை பற்றி வருண் தவான் கூறிய அதிர்ச்சி சம்பவம்…கவலையில் ரசிகர்கள்…

November 13, 2024 at 5:59 pm
pc

சமந்தா நடிப்பில் தற்போது சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. நீண்ட காலத்துக்கு பிறகு சமந்தா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருப்பதால் இந்த சீரிஸ் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவியது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான அந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சமந்தாவின் நடிப்புக்கு மிகச்சிறந்த வரவேற்பை அவர்கள் கொடுத்துவருகிறார்கள். இதனால் அவரும் உற்சாகத்தோடு காணப்படுகிறார்.

தமிழில் அறிமுகமான சமந்தா தெலுங்கிலும் தனது திறமையை நிரூபித்தார். அதனால் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த சமயத்தில் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் ஏதோ காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. நாக சைதன்யா விரைவில் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

இதற்கிடையே விவாகரத்துக்கு பிறகு சமந்தாவின் கரியர் பீக்கில் செல்ல ஆரம்பித்தது. ஆனால் அவருக்கு மையோசிடிஸ் எனும் நோய் வந்ததன் காரணமாக சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். முழுவதும் சிகிச்சையில் கவனம் செலுத்திய அவர்; ஒருவழியாக அதிலிருந்து மீண்டு சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அதனையடுத்து மீண்டும் ஒரு குட்டி பிரேக் எடுத்தார் அவர்.

சூழல் இப்படி இருக்க ராஜ்&டிகே இயக்கியிருக்கும் சிட்டாடல் வெப் சீரிஸ் நடித்திருக்கிறார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. சீரிஸை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயிருக்கின்றனர். ஏனெனில் சமந்தாவின் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்புகின்றன. இந்தச் சூழலில் சிட்டாடல் வெப் சீரிஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் வருண் தவான் மனம் திறந்திருக்கிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், “சிட்டாடல் ஷூட்டிங்கில் இரண்டு சம்பவங்களால் நான் ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். சமந்தாவை நினைத்து எனக்கு கவலையாகத்தான் இருந்தது. ஒருநாள் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது திடீரென அவர் கண்களை மூடிக்கொண்டார். இது சாதாரணமானதுதான் என்று சமந்தா கூறினார். சுமார் இரண்டு மணி நேரம் ஷூட்டிங் நடந்தது. அதற்கு பிறகு ஸ்பாட்டுக்கு திடீரென ஒரு ஆக்சிஜன் டேங்க் வந்தது.

அந்த டேங்க்கிலிருந்து அவர் ஆக்சிஜன் எடுத்துக்கொண்டார். சமந்தா நினைத்திருந்தால் ஷூட்டிங்கிலிருந்து கிளம்பி சென்றிருக்கலாம். ஆனால் அவரோ அப்படி செய்யவில்லை. சைபீரியாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் நான் ஓட வேண்டும். என்னை பின் தொடர்ந்து சமந்தா ஓடி வர வேண்டும் என்ற காட்சி படமாக்கப்பட்டது. நான் கேமராவை தாண்டி ஓடிவிட்டேன். ஆனால் சமந்தாவை காணவில்லை. மயங்கிய சமந்தா: அவர் ஃப்ரேமில் இருக்கும்போதே மயங்கி விழுந்துவிட்டார். அவரை ஓடி வந்து பிடித்துக்கொண்டேன். பிறகு இயக்குநர்களிடம் நான், பேக் அப் செய்துகொள்ளலாம் என்று கூறினேன். அவர்களோ அமைதியாக இருங்கள். கவலைப்பட வேண்டாம். சமந்தா சரியாகிவிடுவார் என்று கூறினார்கள். எனக்கு அப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. சமந்தா ஒரு இன்ஸ்பிரேஷன். அவருக்கு இருக்கும் பிரச்னைக்கு முன்பு எனது பிரச்னைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை” என்றார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website