சல்மான் கான் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்..!!
பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணிபுரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான பான் இந்திய திரைப்படமான ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தற்போது ’கல்கி 2’ மற்றும் ’சூரியா 44’ ஆகிய படங்களில் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் மாஸ் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சிக்கந்தர்’ என்ற படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் பின்னணி இசை அமைக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை தினத்தில் வெளியாக இருக்கும் ’சிக்கந்தர்’ திரைப்படத்தில் சல்மான்கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.