சாக்கு பையில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.., பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கொலையா?
உத்தர பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இளம்பெண்ணின் உடலானது சாக்கு பையில் கிடந்துள்ளது.
இளம்பெண்ணின் உடல்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கதேஹரி, கர்ஹல், மிராபூர், காஜியாபாத் உட்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் கர்ஹல் தொகுதியில் கஞ்சாரா நதி பாலம் அருகே இளம்பெண்ணின் உடலானது சாக்கு பையில் கிடந்துள்ளது.
இந்த உடலானது அந்த தொகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பட்டியலின பெண்ணின் உடல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், “பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கதேரியா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்தின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதில், பிரசாந்த் யாதவ் என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று நீங்கள் யாருக்கு வாக்களிக்கவுள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கிடைத்ததால், தாமரைக்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் பிரசாந்த் யாதவ், சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பின்னர் தான் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.
இது தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் புபேந்திர சிங் சவுத்திரி எக்ஸ் தளத்தில், “சமாஜ்வாதி கட்சியின் பிரசாந்த் யாதவும் அவரது ஆதரவாளர்களும் பட்டியலின பெண்ணை கொலை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.