சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கூத்தாநல்லூர் அருகே உள்ள மாவூர் பகுதியில் உள்ள தனது மனைவியின் அக்காள் மகளை கடந்த 3- ம் தேதி பழனிசாமி கடத்தி சென்று தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகின்றது
இதனை அறிந்த பதறிப்போன சிறுமியின் பெற்றோர் வடபாதிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியுடன் தலைமறைவான பழனிசாமியை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று திருத்துறைப்பூண்டி சாலையில் வைத்து பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.அப்போது 15 வயது சிறுமியையும் பழனிசாமியிடம் இருந்து மீட்டனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
மனைவியின் அக்கா மகளை கடத்தி சென்று பழனிச்சாமி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பழனிசாமியை கைது செய்து சிறுமியை போலீசார் மீட்டு உள்ளனர். தற்போது அந்த சிறுமி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தில் பழனிசாமி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.