சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த நபர் ..2 கிலோ கஞ்சா பிடிப்பு- போலீசாரால் கைது…!!!

புதுச்சேரியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வில்லியனூர் பகுதியை சேர்ந்த நடராஜன் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் குறிவைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்காக தாசில்தார் மற்றும் போலீசார் அவர் வீட்டுக்குச் சென்ற பொழுது வீட்டு முன்பு நின்றிருந்த சிறுவர்களுக்கு சிறிய அளவிலான கஞ்சா பாக்கெட்டுகளில் விற்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவர்களையும், கஞ்சா விற்ற மாரிமுத்துவையும் போலீசார் பிடித்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 2 கிலோ அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் பிடிபட்டன.
இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்தபோலீசார் கொரோனா சோதனைக்கு பின் சிறையில் அடைத்தனர். கஞ்சா வாங்க வந்த சிறுவர்களை எச்சரித்து அனுப்பினார்.