ஜோதிகாவின் படத்தையும் விட்டு வைக்காத காரோணா!!
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின்களில் ஜோதிகாவும் ஒருவர். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனது அனைவரும் அறிந்ததே.
இதை தொடர்ந்து ஜோதிகா 8 வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார், அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்
மொழி ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படம் உருவானது, இப்படத்தை சூர்யா தயாரித்து இருந்தார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை சத்யம் சினிமாஸில் நடைப்பெறுவதாக இருந்தது.
ஆனால், கொரோனோவின் அச்சத்தால் தற்போது இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக கொரோனோவால் பல சினிமா பிரபலங்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மாஸ்டர், சூரரை போற்று படங்கள் ரிலிஸாவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.
அதோடு வலிமை, மாநாடு போன்ற படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.