தன்னுடன் 5 வருடம் குடும்பம் நடத்திய பெண்ணிற்கு மது ஊற்றி கொடுத்து செய்த கொடூர சம்பவம் !!

சென்னை வேளச்சேரி பகுதியில் பழைய பொருட்களை பொறுக்கி விற்பனை செய்து வந்த செல்வி (வயது 55), பரணிதரன் என்னும் 40 வயது நபருடன் வசித்துள்ளார். செல்வியுடன் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இருவரும் ஒன்றாக கடந்த 9ம் தேதி இரவு மது அருந்தியபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பரணிதரன், செல்வியை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வேளச்சேரி அண்ணாநகர் 5வது பிரதான சாலை நடைபாதையில், கடந்த 10ம் தேதி மதியம் செல்வி தலையில் படுகாயங்களுடன் கிடந்தார். காயமடைந்த செவியை அப்பகுதியினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைதார். இதன் அடிப்படையில், கொலை வழக்குப்பதிவு செய்து, பரணிதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.