நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி-தளபதி64 ஹீரோயின் – வைரலாகும் புகைப்படங்கள்..!
தற்போதயை நிலவரப்படி தமிழ் சினிமாவின் டிரெண்டிங் நடிகை யாரென்று கேட்டால் மாளவிகா மோகனன் தான். காரணம் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கிறது.
இதனால் மற்ற நடிகைகளே மாளவிகா மீது கொஞ்சமா பொறாமையில் தான் உள்ளனர். தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானது, சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ திரைப்படத்தில். இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, ‘தளபதி 64’ல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு ‘பட்டம் போலே’ என்ற திரைப்படத்தின் மூலம், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா. கன்னடத்தில், ‘நான் மாட்டு வரலட்சுமி’ என்ற படத்தில் நடித்து முடித்ததும், இரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய ’பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தில், இஷானுக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா.
தொடர்ந்து தமிழ் பட வாய்புகள் குவிந்து வருவதாவும்தளபதி 64 படம் முடிந்ததும் அவற்றில்ஒப்பந்தம் ஆவார் என்றும் கூறுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க நாளுக்கு நாள் அம்மணியின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகின்றது.
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வரும் இவர் தற்போது வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளன.