பணத்துக்காக 12 வயது மகளை 72 வயது முதியவருக்கு விற்ற தந்தை
பாகிஸ்தானில் 72 வயது முதியவருடன் 12 வயது சிறுமியின் திருமணத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
பாகிஸ்தானின் சார்சடாவில், 72 வயது முதியவர் ஒருவர், மைனர் பெண்ணுடன் திருமணத்திற்கு தயாராகியுள்ளார்.
12 வயது சிறுமி தனது தந்தையின் அழுத்தத்தால் அந்த முதியவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார்.
நிக்காவிற்கு எல்லாம் தயாரான நேரத்தில் பொலிஸார் உள்ளே நுழைந்து தடுத்து நிறுத்தினர்.
அதற்கு முன்னதாகவே சிறுமியின் தந்தை தப்பியோடிவிட்டார். இந்த சட்டவிரோத திருமணத்தை நடத்தி வைக்க முயன்ற Nikkah Khwan (திருமணம் நடத்திவைப்பவர்) கைது செய்யப்பட்டார்.
பணத்திற்காக ஆசைப்பட்ட சிறுமியின் தந்தை ஆலம் சயீத் (Alam Syed), மகளை 5 லட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு ஒரு முதியவருக்கு விற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தப்பியோடிய சிறுமியின் தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிறுமியின் தந்தை, 72 வயது முதியவர் மற்றும் நிக்கா குவான் ஆகிய மூவர் மீதும் குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் குழந்தை திருமணங்கள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் ராஜன்பூர் மற்றும் தட்டாவில் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
பஞ்சாப் மாநிலம் ராஜன்பூரில் 40 வயது நபர் ஒருவருக்கு 11 வயது சிறுமிக்கு திருமணம் நடந்தது. இதேபோல் தட்டாவில் மைனர் பெண்ணுக்கு 50 வயது வீட்டு உரிமையாளருடன் நடந்த திருமணத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். மே 6 -ம் திகதி ஸ்வாட்டில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.