பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி திருமணம்!

May 31, 2024 at 4:17 pm
pc

இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த தயாராகி வருகிறது முகேஷ் அம்பானி குடும்பம். அதன்படி, ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண விழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது, அனைத்து நிகழ்வுகளும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேல்ட் சென்டரில்(Jio World Centre) நடைபெற இருக்கிறது.

இதே இடத்தில் தான் 2019ஆம் ஆண்டு ஆகாஷ் அம்பானியின் திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Jio World Centre என்பது 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பன்முக தளமாகும்.

இங்கு சர்வதேச மாநாட்டு மையம், ஹோட்டல்கள், இரண்டு ஷாப்பிங் மால்கள், நிகழ்கலை அரங்கம், ஓபன் ஏர் திரையரங்கம், அலுவலகங்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன.

Jio World Centre உள்ள Jio World கார்டன் தான் திருமண விழாவின் பிரதான இடமாக இருக்கும். 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த திறந்தவெளி தளம், மேற்கு மும்பையில் மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்வு அரங்கமாக கருதப்படுகிறது.

இந்த சொகுசு பூங்காவில் விழாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும், 5000 கார்கள் மற்றும் SUVகளை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website