பெண்களை ஆபாசமாக படம் பிடித்த ராணுவ வீரர்: செல்போனை பார்த்து அதிர்ந்துபோன போலீசார்!
திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.