பெற்ற மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

July 26, 2020 at 6:21 am
pc

குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோர் கூறி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு செந்தாரகை என்ற 23 வயதில் மகள் இருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செந்தாரைக்கும், யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், செந்தாரகைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் செந்தாரை தனது தாய்வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அப்போது வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வழுக்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவரின் பெற்றோர், செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்வதிலே குறிகோளாக இருந்தனர். இதனால் செந்தாரகை மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொலிசாருக்கு தகவ்ல கிடைத்துள்ளது.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது செந்தாரையின் பிரேத பரிசோதனையின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொலை வழக்காக உத்திரமேரூர் பொலிசார் பதிவு செய்துள்ளனர். திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து செந்தாரகையின் கழுத்தை பாலாஜி நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website