மகன், மருமகளால் எனக்கு ஆபத்து: காவல்துறையில் புகார் அளித்த மோகன்பாபு..!
மகன் மற்றும் மருமகளால் தனக்கு ஆபத்து என்று தனக்கும் தன்னுடைய வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நடிகர் மோகன் பாபு காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் மோகன் பாபு என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காவல் ஆணையரிடம் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் அவரது மனைவி மோனிகா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில் தனது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இரண்டாவது மகன் மஞ்சு மனோஜ் சில சமூக விரோதிகளிடம் வந்து தொந்தரவு அளித்ததாகவும், எனவே அவர்களிடமிருந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் பாதுகாக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் நடிகர் மஞ்சு மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் காவல்துறையில் நடிகர் மஞ்சு மனோஜ் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டுக்கு வந்து தாக்கியதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் தனது தந்தையின் பெயரை அந்த புகார் மனுவில் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன் பாபுவின் மூத்த மகன் மஞ்சு விஷ்ணு வெளிநாட்டில் இருந்து ஹைதராபாத்துக்கு விரைந்து உள்ளதாகவும், அவர் தந்தை மற்றும் சகோதரர் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.