மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன?

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஆறு வாரங்கள் வாக்களித்த பிறகு, இந்தியா இன்று முடிவுகளை வெளியிடவுள்ளது.
குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளதோடு இதற்கான முடிவுகள் இன்று வெளியாகவுள்ளமையால் உலக மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில தேர்தல்களுக்கான வாக்குகள் ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பொதுத் தேர்தல் மற்றும் மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி இறுதி வாக்குகள் வரை எண்ணப்படும்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது.
அந்தவகையில் தற்போது தமிழ்நாட்டின் நிலவரப்படி,
- திமுக கூட்டணி – 31
- அதிமுக கூட்டணி – 01
- பாஜக கூட்டணி – 01
- நாதக – 00
- மற்றவை – 00
- மற்றவை – 00
வடசென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முன்னிலை! |
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். |
பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். |
காலை 09.40 மணி நிலவரப்படி திமுக கூட்டணி முன்னிலை. |
ராமநாதபுரம் தொகுதியில் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு. |
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. |