மனைவிக்கு பணம் அனுப்பிய காதலன்: அந்தரங்க உறுப்பை தாக்கிய இளம்பெண்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார். இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. இருப்பினும் இவர் கடந்த 4 மாதங்களாக, சீதா குமாரி என்ற பெண்ணுடன் லிவ் இன் டுகெதரில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், விஜய்குமார் தனக்கு கிடைக்கும் வருமானத்தை சொந்த ஊரில் வசிக்கும் தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இந்த விஷயம் சீதாகுமாரிக்கு தெரியவர, விஜய்குமார் மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சீதா குமாரி, விஜய்குமாரிடம் பல முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு விஜய்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சீதா குமாரி, விஜய்குமாரின் கை கால்களை கட்டி, அவரது அந்தரங்கை உறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து, விஜய்குமார் தாக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு சீதாகுமாரி அங்கிருந்து சென்றுள்ளார்.
வீட்டின் உரிமையாளர், விஜய்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.