மானாவாரியா “செலவை இழுத்துவிட்ட சைக்கோ இயக்குனர்”… நடையை கட்டு விஷால் அதிரடி!!
கடந்த 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் துப்பறிவாளன் படத்தின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் தற்போது, ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.
முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேளைகளில் படக்குழு ஈடுபட்டது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் துவங்கி நடைபெற்று வந்தது. இளையராஜா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். கிட்டத்தட்ட படம் 60% வேலை முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக பொருட் செலவில் படத்தை இயக்கிய வரும் மிஷ்கின், படப்பிடிப்புக்கு முன் முன்கூட்டியே திட்ட மிடாமல் படம் அதிகமாக செலவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கடுப்பான விஷால் மிஷ்கினை படத்திலிருந்து நீக்கி விட்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலே எஞ்சியுள்ள திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்திலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து அந்த பட இயக்குனரான மிஷ்கின், மீதி படம் முடிக்க 40 கோடி கேட்கவில்லை. ரூ.400 கோடி கேட்டேன். 50 % படப்பிடிப்பை 100 கோடியில் முடித்திருக்கிறேன். மீதமிருக்கும் படப்பிடிப்பை முடிக்க 100 கோடி தேவைப்படுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டிலிருந்து குதிப்பது போல் காட்சிகளை அமைக்க பிளான் போட்டேன். அதற்கு மட்டும் 100 கோடி செலவாகும். எனவே மொத்தம் விஷாலிடம் 400 கோடி கேட்டன் என தனது ஸ்டைலில் பங்கம் பண்ணியுள்ளார்.