மீ டூவில் புகார்-23 வருடம் சிறை செல்லும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன்.
ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது.
ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.
இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது
தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை காலத்தை குறைக்கும்படி ஹார்வி தரப்பில் விடுத்த கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த தீர்ப்பு ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.