முதல் நாளே வசூலை குவித்த அமரன்!
சிவகார்த்திகேயனின் அமரன் படம் திரைக்கு வந்திருக்கிறது. உண்மை கதை, ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷனில் செயல்பட்டது, அதில் வீரமரணம் அடைந்தது என அவரை திரையில் கொண்டு வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வந்த நிலையில் ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
அமரன் முதல் நாளில் சென்னையில் பெற்ற வசூல் விவரம் வந்திருக்கிறது.
முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.5 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம் அமரன். அடுத்த மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.