ரெளடி பேபி பாடல்! யூடியூப் தளத்தில்: இந்திய அளவில் நெ.1, உலகளவில் 7-வது இடம்பெற்று சாதனை .

December 6, 2019 at 3:48 pm
pc

மாரி 2. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.

ஏப்ரல் மாதம், யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியது. இதனால் யூடியூபில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் தென்னிந்தியப் பாடல் என்கிற பெருமையையும் அடைந்தது. தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 179 மில்லியன் பார்வைகளும் 196 மில்லியன் பார்வைகளும் அப்போது பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைச் சுலபமாகத் தாண்டியது ரெளடி பேபி பாடல். தற்போது இந்தப் பாடலுக்கு யூடியூபில் 72 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் இந்த வருடம் யூடியூபில் அதிக டிரெண்டிங் ஆன விடியோக்களில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது ரெளடி பேபி பாடல். இதுதவிர உலகளவில் அதிகம் பேர் பார்த்த விடியோக்களில் ரெளடி பேபிக்கு 7-ம் இடம் கிடைத்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website