வயநாடு மக்களுக்கு அம்பானியின் மனைவி நீடா அம்பானி..செய்யும் உதவிகள் !!குவியும் பாராட்டு
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வயநாடு மக்களுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை நிவாரணம்
அந்தவகையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை (Reliance Foundation) உடனடி நிவாரணங்களை அறிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தின் அதிகாரிகளுடன் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை அரசுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு நிவாரணம் முதல் மறுகட்டமைப்பு வரை அனைத்துவிதமான உதவிகளையும் இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் செய்து கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானி, கேரளாவில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து, “வயநாடு மக்களின் துயரம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம்.
எங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளை குழுக்கள் மாவட்ட மக்களுக்கு உடனடி பதில், மீட்பு மற்றும் நீண்ட கால தேவைகளை செய்கின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கேரள மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்” என்று கூறியுள்ளார்.
1.பழங்கள், பால், உலர் உணவுகள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் குடும்பங்களுக்கு அடுப்பு போன்ற பிற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட சத்தான உணவுகளை வழங்குதல்.
2. சுத்தமான தண்ணீர், சுகாதாரமான கழிப்பறைகள், மக்களுக்கு அன்றாடம் தேவையான சோப்பு, பற்பறை உள்ளிட்ட பொருட்கள்.
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள், படுக்கைகள், சூரிய ஒளி விளக்குகள், உடைகள் மற்றும் துப்புரவுப் பொருட்கள்
4. விவசாயிகளுக்கு விதைகள், தீவனம், கருவிகள் மற்றும் விவசாயத்தில் மீண்டும் கவனம் செலுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த பயிற்சிகள்.
5. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியைத் தொடர்வதை உறுதிப்படுத்த புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட கல்வி உதவி
6. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொலைதொடர்பு வசதியில் இருக்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ பிரத்யேக டவர்கள்.
7. நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனைகள், குணமடைய தேவையான உதவிகள்.