விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான மாகாபா ஆனந்த் மீது புகார்!
தமிழ் சினிமாவில் டாப் தொலைக்காட்சிகளின் ஒன்று விஜய் டிவி. சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு புகழ்பெற்ற விஜய் டிவியின் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் மாகாபா ஆனந்த். இவரது கலகலப்பான மற்றும் காமெடி கலந்து பேச்சு அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறப்பாக இருக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி இசை வெளியீட்டு விழா, இசைக் கச்சேரி எனவும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், திருச்சியில் ரோட்டில் பிரமாண்டமாக செட் போட்டு நடத்த பட்ட ஒரு நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கியதாகவும், அந்த நிகழ்ச்சி உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மாகாபா ஆனந்த் மீது புகார் அழிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.