வித்தியாசமான வாழைத்தண்டு தயிர் பச்சடி செய்து அசத்தலாம் வாங்க …!!

தேவையானபொருட்கள்:
வாழைத்தண்டு நருக்கியது – 1 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
தேங்காய் – ¼ கப் துருவல்
தயிர் – ¾ கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சர்க்கரை – ¼ டீஸ்பூன்
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். கடாயில் வாழைத்தண்டை போட்டு நன்றாக வதக்கி வேக விடவும். வெந்தபின் தட்டில் போட்டு ஆற விடவும்.
தயிரை கிண்ணத்தில் ஊற்றி விஸ்க் வைத்து நன்றாக கலக்கவும். மிக்ஸியில் தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிருடன் கலந்து உப்பு சர்க்கரை வாழைத்தண்டு மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது சுவையான வாழைத்தண்டு பச்சடி தயார்.