விமானங்களில் தேங்காய் எடுத்து செல்ல முடியாது: என்ன காரணம்?
விமான பயணத்தின் போது தேங்காய் எடுத்து செல்ல ஏன் அனுமதியில்லை என்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். விமானத்தில் நாம் பயணம் செய்யும் போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதிலும், நாம் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதில் சில பொருட்கள் விமானத்தில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
அந்த வகையில், கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஆகிய பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதியில்லை.
இதனை தவிர விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இந்த தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் பொருளாகும்.
தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதியில்லை.
இந்நிலையில், அண்மையில் விமான நிலைய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வழக்கமாக மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விமானங்களில் பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால், புதிய விதிமுறையின்படி சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் குறித்த மாற்றங்களை பயணிகள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். புதிய விதிமுறைகளின் படியே பயணிகள் பொருட்களை பேக் செய்ய வேண்டும்.