விரக்தியில் சந்தீப் கிஷன்!! நான் மக்களுக்கு இப்படி மோசடி செய்வேனா?

July 29, 2024 at 11:16 am
pc

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் மூலம் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த இவர் அந்த நட்பின் அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள ராயன் படத்திலும் தனுஷ் உடன் இணைந்து அவரது டைரக்ஷனிலும் நடித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு சந்தீப் கிஷன் செகந்திராபாத்தில் நடத்தி வரும் அவரது விவாக போஜனம்பு என்கிற உணவகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது சில குறைபாடுகளை கண்டுபிடித்து அதற்காக சம்மனும் அனுப்பி உள்ளனர். மேலும் காலாவதியான அரிசி மூட்டை ஒன்று அங்கே இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். சந்தீப் கிஷன் அப்போதே இது குறித்து விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இதற்கு உணர்வுப்பூர்வமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “இது ஒரு வழக்கமான ரெய்டு தான். எங்களது உணவகத்தின் ஏழு கிளைகளில் இருந்து, ஒரு கிளைக்கு தினசரி 50 பாக்கெட் என நாளொன்றுக்கு 350 பாக்கெட் சாப்பாடு ஆதரவற்றோருக்காக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் இதுவே 4 லட்சம் ரூபாய் ஆகிறது. இவ்வளவு தொகையை நாங்கள் இப்படி இல்லாதவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கும்போது, காலாவதியான அரிசியை பயன்படுத்தி அதில் பணத்தை மிச்சம் பண்ண போகிறோமா என்ன? அதுமட்டுமல்ல இந்த ரெய்டுக்கு பிறகு எங்கள் உணவகத்தில் உணவு பொருட்களின் விலைகளையும் கணிசமாக ஏற்றி விட்டோம். ஆனாலும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எப்போதும் குறையவே இல்லை” என்று கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website