வெட்கத்தை மெல்ல விலக்கு..! ”அந்த உணர்வுகளை அடக்கினால்” தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் கல்வி சாத்தியமே.

தொடரும் பாலியல் வன்முறை . எங்குதான் இதன் பிரச்னை ஆரம்பம் .? இதன் முற்றுப்புள்ளி என்ன .? பாலியல் உறவு ஓர் அழகான உறவு. அது நம்மிடமிருந்து மறைத்து வைக்க வேண்டிய விசயமில்லை. “நமக்கான பாலியல் துணை வரும்போதுதான் நாம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அது நம் துணைக்கு செய்யும் ஒரு மரியாதை. நம் காதலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு.” என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு பாலியல் கல்வி அவசியமானதாக உணரப்படுகிறது.பத்தாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாலியல் உறவைப் பற்றி முழுதாக சொல்லித் தருவதில்லை. ஆனால், “அது ஒரு நல்ல உறவு. அதனால்தான், நாம் எல்லோரும் இங்கு இருக்கிறோம்” என்று சொன்னாலே போதுமானது. இதை சொல்லாமல் விட்டால் சரியான வழிகாட்டுதல் இன்றி தவறாக அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ளும் ஊடகங்களில் காட்டும் பாலியல் உறவில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை.

இவை எல்லாம் ஏன் வீட்டில் சொல்லித் தர முடியாதா? கண்டிப்பாக, சரியாக அனைத்தையும் சொல்லித்தரும் அளவுக்கு இந்திய பெற்றோர்கள் இல்லை. அவர்கள் பலவற்றை மறைத்து வைக்கத்தான் நினைக்கிறார்கள். வீட்டில், டிவி பார்க்கும்போது ஒரு முத்தக்காட்சி வந்த உடனேயே சேனலை மாத்திடுவாங்க. அப்பதான் அது என்னன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் ஏற்படும்.
ஆசிரியர்களும் கூட, இனப்பெருக்க முறை பற்றி பாடம் வந்தால், “இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு? நீங்களே படிச்சாலே புரியும்.” என்று சொல்லிவிடுவார்கள். தகுந்த ஆசிரியர்கள், முறையான பாடத்திட்டம், வழிகாட்டுதல் இருந்தால் பாலியல் கல்வி சாத்தியமே.