அடடே எலுமிச்சை பழ தோலை வைத்து எதையெல்லாம் செய்யலாமா …இவ்ளோ நாள் தெரியாம போச்சே …!!

October 6, 2022 at 8:30 am
pc

எலுமிச்சை பழம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் வாங்க கூடிய ஒன்று. இதை நாம் உபயோகிக்கவே இல்லை என்றாலும் இரண்டு மூன்று எலுமிச்சை பழங்கள் எல்லோர் வீட்டு பிரிட்ஜிலும் இருக்கும். இது இப்படி வாங்கி வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த பழங்களை நீங்கள் அப்படியே வாங்கி வைத்திருந்தால் அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் கெட்டு வீணாகி விடும். எனவே நீங்கள் வாங்கி வைத்து இருக்கும் பழத்தை பிழிந்து சாறு எடுத்து ஐஸ் க்யூப் டிரேவில் வைத்து விட்டால் எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த சாறு கெட்டுப் போகாது. தேவைப்படும் போது கொஞ்சம் முன்னதாக ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்து விட்டால் எலுமிச்சை சாறு கிடைத்து விடும். இப்படி பழத்தை மட்டுமல்ல பழத்தை பிழிந்து தோலை தூக்கி போடாமல் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து விடுங்கள். அதை வைத்து எண்ணற்ற வீட்டி குறிப்புகள் உள்ளது. அதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வீட்டில் பித்தளை பாத்திரம் பூஜை பாத்திரங்களை தேய்க்க கொஞ்சம் பேக்கிங் சோடா அல்லது சபீனா போன்ற ஏதாவது ஒரு பவுடரை பாத்திரம் தேய்க்க எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த எலுமிச்சை தோலையும் தொட்டு நன்றாக தேய்த்து விட்டால் போதும். இதில் நீங்கள் வேறு எதுவும் சேர்த்து தேய்க்க வேண்டாம் பித்தளை பாத்திரங்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

தோசை கல்லை சுத்தம் செய்ய அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை வைத்து அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். இப்போது தோசைக்கல் லேசான சூட்டில் இருக்கும். அதில் இந்த எலுமிச்சை பழத்தோடு கொஞ்சம் சால்ட் சேர்த்து நன்றாக ஓரங்களில் எல்லாம் தேய்த்து விட்ட பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு கழுவினால் அதன் ஓரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போய்விடும். பிறகு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் ஒரு டீஸ்பூன் சமையல் எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து அதை இந்த தோசை கல் மேல் தேய்த்து விட்டு இதன் பிறகு நீங்க தோசை ஊ ற்றினால் தோசை கல்லில் தோசை ஒட்டாமல் மொறுமொறுவென்று வரும். கல்லில் உள்ள அந்த வாடையும் போய்விடும். எண்ணெய் பிசுக்கும் இல்லாமல் தோசைக்கல் நீண்ட நாள் உழைக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த எலுமிச்சை பழ தோலை வைத்து அதன் மீது பேக்கிங் சோடாவை தூவி வைத்து விட்டால் வீட்டில் அசைவம் சமைத்த வாடை வராமல் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை நீங்கள் பிரிட்ஜ்ல் கூட வைத்து விடலாம் பிரிட்ஜில் வாடை வராது.

இந்த வேஸ்டான எலுமிச்சம் பழம் தோள்களை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதித்து ஆறியவுடன் அந்த தண்ணீருடன் சேர்த்து நன்றாக இந்த பழ தோலை பிசைந்தால் இன்னும் சாறு அதிகமாக கிடைக்கும் அதை வடிகட்டி தனியாக அந்த தண்ணீரை தனியாக எடுத்து கொண்டு அதில் சால்ட் உப்பு இல்லை கல் உப்பு எதுவாக இருந்தாலும் சேர்த்துக் இத்துடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து விடுங்கள். இதை வைத்து வீட்டில் பல இடங்களில் உள்ள கறைகளை சுத்தம் செய்யலாம். குறிப்பாக காஸ் ஸ்டவ், அதன் பின்புறம் உள்ள டைல்ஸ், கிச்சன் மேடை இல்லை உங்கள் வீட்டில் கறை படிந்து எந்த இடங்களாக இருந்தாலும் இந்த ஸ்பிரே தண்ணீரை அடித்து சுத்தம் செய்யலாம்.

அதே போல் இந்த கொதிக்க வைத்த தண்ணீர் சூடாக இருக்கும் போது ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு நீங்கள் தினமும் உபயோகிக்கும் சீப்பு, டூத் பிரஷ் போன்றவைகளை இதில் ஊற சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு நீங்கள் ஒரு நார்மல் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். நீங்கள் வேண்டாம் என்று தூக்கி போடும் இந்த எலுமிச்சை பழ தோலை வைத்து இவ்வளவு பயன்கள் உண்டு என்பதை பதிவை படித்த பிறகு உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website