அரசு மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்!

மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் பல தடைகளை தாண்டி மருத்துவராகி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய மாநிலமான குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா. இவர் 72% உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷ் பாரையாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால், இவரின் உயரத்தை பார்த்து மருத்துவராக முடியும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் எதிர்பார்க்கவில்லை.
இவரால், அவசர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை காரணம் காட்டி 2018 -ம் ஆண்டு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கையை மறுத்துள்ளனர்.
இந்த விடயத்தில் கணேஷின் பள்ளி முதல்வர் அவருக்கு உறுதுணையாக இருந்தார். உயரம் குறைவாக இருப்பபவர் மருத்துவராக முடியாதா என்று கூறி சட்ட போராட்டத்தை கையில் எடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கணேஷை சேர்க்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
இதன்பின்னர், 2019 -ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த கணேஷ் MBBS படிப்பையும் முடித்தார். தற்போது, பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
நாற்காலியில் நின்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இவரை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைகின்றனர்.