ஆதாருடன் பான் கார்டை இன்னமும் இணைக்கவில்லையா…? அப்போ உடனே இதை பண்ணுங்க.. ….!!

July 3, 2022 at 1:39 pm
pc

பான், ஆதார் கார்டு எண்களை இணைக்க மத்திய நிதித்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்துவதற்கான முக்கிய காரணம், வரி கட்டாதவர்கள் நமக்கு பான் கார்டு எதற்கு என்று அதை பொருட்படுத்தாமல் இருப்பதால் தான். ஆனால், பான் கார்டு ஒரு வருமான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல.

இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுக்காப்பானதாவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆதார் கார்டுடன் இணைக்க வலியுறுத்துகின்றனர். ஒரு இந்திய குடிமகனின் வாழ்க்கையில் ஆதார் கார்டு எப்படி முக்கியமான ஆவணமாக மாறியுள்ளதோ, அதேபோல் இனி வரும் காலங்களில் பான் கார்டும் அப்படி தான் இருக்கப் போகிறது.

இதற்காக, பல முறை மத்திய அரசு காலக்கெடு மற்றும் அவகாசத்தை அளித்தது. ஆனால், யாரும் அதை ஒரு பொருட்டாக எடுத்து செயல்படுத்தவில்லை. இதையெல்லாம், அறிந்த நிதித்துறை அமைச்சகம் இதுவரை ஆதார், பான் கார்டை இணைக்காதவர்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை அளித்திருந்தது. அது அனைவரும் அறிந்ததே! அந்த வகையில் ஆதார் எண்ணுடன் பான் கார்டை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பான் அல்லது ஆதாரில் பிழை இருந்தால்

ஒருவேளை பான் அல்லது ஆதார் கார்டில் ஏதேனும் பிழை இருந்தால், உங்களால் இணைக்க முடியாது. உதாரணமாக, உங்களுடைய ஆதார் கார்டில் இருக்கும் பெயரும், பான் கார்டில் இருக்கும் பெயரும் ஒரே மாதிரி இல்லாவிட்டால் இரண்டையும் இணைக்க முடியாது. அதற்கு நீங்க முதலில் அந்த ரெண்டு கார்டிலும் இருக்கும் பெயரில் எது சரியானது என்பதை அறிந்து, தவறான அட்டையை பிழை திருத்தத்திற்கு அனுப்ப வேண்டும்.

இரண்டு கார்டுமே கிட்டதட்ட 30 நாளைக்கு பிறகுதான் கைக்கு கிடைக்கும். அதன்பிறகே இரண்டையும் இணைக்க இயலும். அப்படி பிழை திருத்தத்திற்கு சென்றாலும் நீங்க அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே, இதுவரை இதற்காக எந்த ஸ்டெப்பும் எடுக்காதவர்கள் உடனே அருகில் உள்ள இ – சேவை மையத்திற்கு சென்று உடனே பதிவு செய்துக்கொள்ளுங்கள்…

நீங்க இதை வீட்டிலிருந்தே பண்ணலாம்

இப்போது வரை ஆதார், பான் அட்டையை இணைக்காதவர்கள், வீட்டிலிருந்தே ஈசியாக ஒரு செலவும் இல்லாமல் இணைத்துக் கொள்ளலாம். இதற்காகவே மத்திய நிதித்துறை அமைச்சகம் ஒரு புதிய இணையதளப் பக்கத்தை வெளியிட்டுள்ளது. பான் ஆதாரை இணைப்பதற்கு உங்களுக்கு வேண்டியது ஒரு ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் மட்டுமே.. சரி! எப்படி இணைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்…

  • முதலில் உங்க ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் அல்லது கூகுள் குரோமை ஓபன் பண்ணிக்கோங்க. அதில், incometax.gov.in என்ற இணையதள முகவரியை உள்ளிடவும்.
  • வருமானவரித் துறையின் முகப்பு பக்கம் ஓபன் ஆகும், அதில் எங்கள் சேவைகள் என்ற பக்கத்தில் லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் PAN, ஆதார் எண், பெயர், மற்றும் தொலைப்பேசி எண்ணை சரியாக உள்ளிடவும். பின்னர், உங்களுடைய ஆதார் அட்டையில் வெறும் பிறந்த வருடம் மட்டும் இருந்தால், I have only year of birth in Aadhaar card என்பதை டிக் செய்யவும்.
  • மேலும் உங்க ஆதார் விவரங்களை சரிபார்க்க நீங்கள் ஒப்புக்கொள்ளும் பெட்டியையும் டிக் செய்யவும். ‘லிங்க் ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிடவும்.
  • மறுபடியும் முகப்பு பக்கத்திற்கு சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்பதை கிளிக் செய்து பான், ஆதார் எண்ணை உள்ளிட்டு உங்களுடைய ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website