“ஆழ்துளை கிணற்றில் விழுந்த தங்கை” தலைமுடியை பிடித்து காப்பாற்றிய அக்கா -குவியும் பாராட்டுகள்…!
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியின் அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக் கண்ட 14 வயது தேவிஸ்ரீ என்ற சிறுமி உடனடியாக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி உள்ளார்.
கிணற்றில் விழுந்த சிறுமியின் தலை முடியை பிடித்துக்கொண்டு தேவிஸ்ரீ சத்தமிட உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உள்ளனர். இதன் பின்னர் அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தனது தங்கையை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்பதை அறிந்ததும் உடனடியாக புத்திசாலித்தனமாக காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவிஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது