ஆஸ்துமா இருக்கா?அலட்சியம் வேண்டாம்…தொடர்ந்து தலைமுறைகளை தாக்கும்…

September 16, 2023 at 10:02 pm
pc

இன்றைய இயந்திரமயமான உலகில் உடல் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது, அதிலும் குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவனிக்கும் தன்மையும் பெற்றோர் மத்தியில் அருகியே வருகின்றது என்றால் மிகையாகாது.

சூழல் மாசு காரணமாகவும் துரித உணவுகளை பெற்றுக்கொள்வோரின் வீதம் அதிகரித்தமை காரணமாகவும் நோய் அபாயமும் தற்போது அதிகரித்துவிட்டது. அவ்வாறு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிலும் பாகுபாடு இன்றி மனித குலத்துக்கே சவலாக விளங்கும் நோய்களில் ‘க்ரொனிக் ‘ (chronic )எனப்படும் நாள்பட்ட நோய்கள் பிரதானமானவை.

பொதுவாக மூன்று மாதங்களுக்கு மேலாக தொடரும் பிரச்சினையை தான் க்ரொனிக் என கூறுகின்றோம். இந்தவகை நோய்களுக்கு முக்கியமான உதாரணமாக ஆஸ்துமா குறிப்பிடப்படுகின்றது.

இது சுவாச கோளாறுடன் தொடர்புடைய நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும் கட்டுப்படுத்த முடியும்.

ஆஸ்துமா பாதிப்புக்கான காரணிகள்  

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதிலும் ஏற்படலாம் மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்று, துரித உணவுகள், குடும்ப பின்னணி போன்றவை தான் ஆஸ்துமாவிற்கான பிரதான காரணிகளாகும். இது மூச்சு குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் பிரச்சினை என்பதால் நேரடியாக அவற்றுக்கு மட்டும் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும்.

எனவேதான் ஆஸ்துமாவை பொறுத்தவரை மாத்திரைகளுக்கு பதிலாக இன்ஹலர் மூலம் மருந்து உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆஸ்துமாவுக்கான மருந்துகளிலும் எல்லா மருந்துகளையும் போலவே சில பக்க விளைவுகள் இருக்கின்றன.

மாத்திரை வடிவில் இந்த மருந்துக்களை உட்கொள்ளும் போது அவை உடலின் மற்ற உறுப்புகளையும் சென்றடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இன்ஹலர் வழியாக உறிஞ்சும் போதும் மருந்து நேரடியாக நுரையீரலை சென்றடையும் என்பதால் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவருக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் தெரிகின்றன, மூச்சு திணறல் தொந்தரவின் தீவிரம் எந்தளவுக்கு இருக்கிறது, இருமல் இருக்கிறதா, நெஞ்சு இறுக்கம் காணப்படுகிறதா, குடும்ப பின்னணியில் யாருக்கேனும் ஆஸ்துமா பிரச்சினை இருக்கிறதா போன்ற தகவல்கள் முதலில் பெறப்படும்.

ஆஸ்துமா அறிகுறிகள் 

தொடர்ந்து எந்தெந்த சூழலில் மேற்குறிப்பிட்ட அறிகுறிகளின் தீவிரம் அதிகமாக இருக்கிறது என பார்க்கப்படும் உதாரணமாக இரவு அல்லது அதிகாலை நேரங்களிலோ, அதிக புகையை சுவாசிக்கும் போதோ செல்லப் பிராணிகளுடன் விளையாடும் போதோ, அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போதோ, மூச்சு திணறல், இருமல் போன்ற அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் ஆஸ்துமா பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

அடுத்த கட்டமாக நுரையீரல் செயற்திறன் பரிசோதனை (lung function test) செய்யப்பட்டு குறிப்பாக பல்மனரி செயற்திறன் பரிசோதனை ( pulmonary function test) ஸ்பைரோமெட்ரி ( spirometry) இயந்திர பரிசோதனை பீக்ஃப்ளோ போன்ற பரிசோதனைகள் செய்ய வேண்டும் மூச்சுக் குழாயின் சுவாச பாதையில் எந்தளவுக்கு பாதிப்பு அல்லது அடைப்பு உள்ளது என இவற்றின் மூலம் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு மருந்தின் அளவு பரிந்துரைக்கப்பட்டு இன்ஹலர் அளிக்கக்கப்படுகிறது.

மேலும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் குளிர் மற்றும் வெயில் காலங்களில் வைரஸ் தொற்றுக்கள் வேகமாக பரவும் எனவே அந்த கால கட்டத்தில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்துகள் இருக்கின்றன அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால் பிரச்சினைகள் ஏற்படாது.

பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்

தினமும் சரியான அளவு மருந்துகளை உற்கொள்ள வேண்டும் அதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்த கூடாது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து காலத்திற்க்கு ஏற்ப மருந்தின் அளவும் மாறுபடும் என்பதால் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ஆஸ்துமா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்

ஆஸ்துமா பிரச்சினை இருப்பவர்கள் தங்களுக்கு எத்தகைய சூழல் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் அதை தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும்.

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் யாருக்கும் ஏற்படலாம் எனவே ஆஸ்துமா அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். 

சிறுவயது முதல் இறுதிக் காலம் வரை தொடரும் இந்த பிரச்சினையை முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும் கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். நு

நவீன மயப்படுத்தப்பட்ட மருத்துவம்

ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிப்பது, அதிகமாக சிரித்தாலோ பேசினாலோ இருமல் வருவது, அடிக்கடி தும்மல் வருவது, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் ஏற்படுவது போன்றவை ஆஸ்துமாவுக்கான முக்கிய முதல் நிலை அறிகுறிகள் ஆகும்.

இப் பிரச்சினையை ஆரம்பத்திலேயே சரிசெய்யாவிட்டால் தொடர்ச்சியாக ஒவ்வாமை காரணமாக மூச்சுக்குழாயின் தசைகள் தளர்வடைந்து சுருங்கிவிடும் மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம் அதிகரிப்பது, மூச்சு திணறல், நெஞ்சில் இறுக்கம் போன்றவை தெரியத் தொடங்கும்.

ஆஸ்துமா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நாள் முதல் நோயாளிகள் இரண்டு வகையான மருந்துகளை கையில் வைத்திருக்க வேண்டும் ஒன்று கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ( controlled medicine ) மற்றொன்று நிவாரண மருந்து (Reliever medicine )கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை மருத்துவர்கள் சொல்லும் விகிதத்தில் தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஆஸ்துமா ஒரு வாழ்நாள் பிரச்சினை என்றாலும் அதை கண்டு பயப்பட வேண்டியதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் அதற்கான மருத்துவம் தற்போது இன்னும் நவீன மயப்படுத்தப்பட்டு விட்டது. 

எனவே இது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை, இருப்பினும் எம்மால் இயன்றளவு நோய் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்ப்பதும் ஆஸ்துமா அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் இருப்பதும் எமது ஆரோகியத்தை பாதுகாக்கும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website