இணையத்தை கலக்கும் தனுஷின் ‘D50’ லுக்..சரத்குமார்-ராதிகாவுடன் வைரல் புகைப்படம்..!




தனுஷ் நடித்து இயக்கி வரும் ‘D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் இந்த படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்டமான செட்டில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வடசென்னை பின்னணியாக கொண்டு என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் தனுஷ் பிரபல நட்சத்திர தம்பதிகளான சரத்குமார் மற்றும் ராதிகாவை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தனுஷ் மிகவும் ஸ்டைலாக மீசையுடன் தொப்பி அணிந்து இந்த புகைப்படத்தில் இருப்பதை பார்த்து இதுதான் ‘D50’ படத்தின் தனுஷ் லுக் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை தற்போது இந்த புகைப்படங்களை தனுசு ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்