இறாலோடு இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து!
கடலுணவான இறாலை எல்லோருக்கும் பிடிக்கும். இறாலில் தொக்கு, குழம்பு, பிரியாணி என பல வகையாக செய்து உண்டிருப்போம். கடல் உணவுகளிலேயே இறால் மிகவும் சுவையானது. ஆனால் இந்த சுவைமிக்க இறாலோடு குறிப்பிட்ட சில உணவுளை சேர்த்து உண்ணக்கூடாது. அந்த உணவோடு உண்பதால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாக்குவதுடன், இது உயிருக்கே ஆபத்தாகிவிடும். அவ்வாறான உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1. இறாலில் புரதம் நிரம்பி உள்ளது. பாலில் கல்சியம் உள்ளது. இதனால் பால் மற்றும் இறாலை இரண்டையும் சேர்த்து உண்பதால் வயிற்றின் செரிமான பிரச்சினையும், வயிற்றுப் போக்கும் ஏற்படுகின்றது.
2. காரமான பொருட்களை இறாலோடு சேர்த்து உண்டால் காரப்பொருட்களில் உள்ள அதிகமான வெப்பம் இறாலின் சுவையை மட்டுப்படுத்தும். இது வயிற்றின் மென் படலத்தில் எரிச்சலை உண்டாக்கி உணவு செரிமானத்தில் கோளாறுகளை உண்டாக்கும்.
3. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை இறாலுடன் சேர்த்து உண்ண கூடாது. இறாலில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றது. அதனால் சிவப்பு இறைச்சி மற்றும் கீரைகளை போன்ற உணவுகளை இறாலுடன் சேர்க்க கூடாது. இதனால் இரும்புச்சத்து உடலுக்கு கூடுதலாக கிடைக்கும் போது பக்க விளைவை உண்டாக்கும்.
4.சிட்ரஸ் பழங்களை இறாலுடன் சேர்த்து உண்ணும் போது செரிமான கோளாறுகளை இது ஏற்படுத்தும். சிட்ரஸ் பழத்தில் உள்ள அஸிடிட்டி இறாலில் இருக்கும் புரதத்தோடு சேரும் போது அது செரிமானப்பிரச்சனையையும், வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்துகின்றது.