உலகின் மிக அழகான பெண்ணாக மாற ஆசை பட்டு ..15 அறுவை சிகிச்சை!! அடையாளம் தெரியாமல் மாறிப்போன பெண் கூறிய விடயம்….

August 14, 2022 at 3:33 pm
pc

2010ஆம் ஆண்டு காதலருடன் மனமுறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உருவத்தை மாற்ற செர்ரி லீ முடிவு செய்துள்ளார்

கிம் கர்தாஷியன் போல் மாற பிரேசில் மொடல் அழகி ஒருவர் 12 ஆண்டுகளாக 4 கோடி வரை செலவு செய்துள்ளார்  

தென்கொரியாவில் இளம்பெண்ணொருவர் நடிகை போல மாற ஆசைப்பட்டு, 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவழித்து உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

உலகின் மிக அழகான பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட தென் கொரிய இளம்பெண் செர்ரி லீ (28), தனது உடலில் பல மாற்றங்களை செய்துகொள்ள ஆரம்பித்தார்.

பிரபல நடிகையான கிம் கர்தாஷியனை பின்தொடரும் செர்ரி லீ, அவரைப் போல மாற இதுவரை 15க்கும் மேற்பட்ட முறை தனது உடலின் முகம், கண்கள், மார்பு, இடுப்பு மற்றும் பின்பகுதி இடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். 

இதுகுறித்து செர்ரி லீ கூறுகையில், ‘கிம் கர்தாஷியனை பார்த்து வளர்ந்தவன் நான். அவரைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என விரும்பினேன். அவர் எப்போதும் எனக்கு ஓர் உந்துதலாக இருந்தவர்.

எனது பார்வைக்கு உலகின் மிக அழகிய பெண்மணியாக தெரிந்தவர். நான் உண்மையில் முன்பு இருந்ததற்கும், தற்போது இருப்பதற்கும் முற்றிலும் வேறுபட்ட நபராக காட்சியளிக்கிறேன்.

மேற்கத்திய பெண்ணாக தோன்றுகிறேன். எனது கொரிய குடும்பத்தினர் பலருக்கு என்னை அடையாளம் காணக்கூட முடியவில்லை. இதனை நான் முன்பே செய்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website