உலக பாரம்பரிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ!

February 2, 2024 at 5:43 am
pc

அர்ஜென்டினாவின் Los Alerces தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக கிட்டத்தட்ட 600 ஹெக்டர் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் அமைந்துள்ள the Los Alerces தேசிய பூங்கா, கடந்த 2017ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இதற்கு காரணம் இந்த பூங்காவில் பல்லாயிரக்கணக்கான அரியவகை உயிரினங்களும், பழமையான மரங்களும் இங்கு பாதுகாக்கப்படுவது தான்.

கிட்டத்தட்ட 1,90,000 ஹெக்டர் அளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இதன் ஒரு பகுதியில் காட்டுத்தீ உண்டானது. இந்த தீ மளமளவென பரவிய நிலையில், தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர்.

சுமார் 600 ஹெக்டர் வரை காட்டுத்தீயால் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பூங்காவின் தீயணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் அவசரகால துறையின் தலைவர் Mario Cardenas கூறுகையில்,

‘தீ ஆபத்து தீவிர மட்டத்தில் இருப்பதாலும், காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாகவும், தீயை அணைப்பதற்கு வானிலை பாதகமாக இருப்பதாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அண்டை நாடுகளின் உதவியை நாட அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1937ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Los Alerces தேசிய பூங்கா 1,000 ஆண்டுகள் பழமையான Larch காடுகளுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website