ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியா நம்பர் 1
ஐசிசி தரவரிசையில் இந்திய அணி மீண்டும் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஆனால், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் நம்பர் ஒன் இடம் சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. டெஸ்ட் தரவரிசையில் ஆஸி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா (120) இரண்டாவது இடத்திலும் உள்ளது.