கடல் கடந்து சாதித்த தமிழனின் காதல்!

November 20, 2023 at 7:37 pm
pc

தமிழக மாவட்டம் தஞ்சாவூரில், அமெரிக்க பெண்ணை தமிழ்முறைப்படி தஞ்சாவூர் இளைஞர் திருமணம் செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (35). இவர், பொறியியல் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே போல, அமெரிக்கா மசாச்சூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த அன்னி டிக்சன் (35) என்பவர் எம்.ஏ.சைக்காலஜி முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து, திருமணம் குறித்து பேசி நிச்சயிக்கப்பட்டது.அதன்படி, சங்கரநாராயணன் மற்றும் அன்னி டிக்சனின் திருமணமானது தஞ்சாவூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று (நவ.19) காலை நடைபெற்றது.மந்திரங்கள் தமிழில் ஓதப்பட்டு, தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் திருக்குறள் வாசித்து மணமகன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.இந்த திருமணத்தில் சங்கரநாராயணன் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அன்னி டிக்சனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அமெரிக்காவில் வேலை பார்த்த நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடையை அணிந்து வியப்பாக இருந்தது.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website