கடைசி வரை நிறைவேறாமலேயே போன கே. பாலச்சந்தரின் ஆசை
தமிழ் திரையுலகில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் ஆசை ஒன்று கடைசி வரை நிறைவேறாமலேயே போனது. தன்னுடைய இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரையும் ஒரே திரைப்படத்தில் இணைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இருப்பினும் ரஜினி என்னும் சூப்பர் ஸ்டாரை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதும், கமல் என்னும் மாபெரும் கலைஞனுக்கு பல வாய்ப்புகள் வழங்கியதும் தமிழ் திரை உலகிற்கு அவர் செய்த பங்களிப்பாக பார்க்கப்படுகிறது.