கள்ளக்குறிச்சி மரணம்: ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வழங்க விஜய் முடிவு

June 22, 2024 at 6:05 pm
pc

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆறுதல்

தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 

இதில், தற்போது வரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விஜய் கட்சி உதவி:

இந்நிலையில், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை சார்பில் எக்ஸ் தளத்தில், “‛தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிக்காட்டுதலின்படி கள்ளக்கறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மறஅறம் அத்தியாவசிய பொருட்களை மாவட்ட தலைமை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website