காதல் … “பிரேக்கப்” செய்த மாணவியை டார்ச்சர் செய்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை…

August 11, 2022 at 5:13 pm
pc

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியர். இவரதுமகள் திவ்யா வயது 20. இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்தார். திவ்வியாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திவ்யா ரஞ்சித்துடனான காதலை பிரேக்கப் செய்துள்ளார்.

ஆனாலும் ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்து தொடர்ந்து திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மேலும், திவ்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரஞ்சித் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், திவ்யா வேறு ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் திவ்யாவை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்த நிலையில் இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடரவே ஆத்திரமடைந்த திவ்யாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தை தட்டி கேட்டுள்ளனர். அப்போது, கேட்டு தாக்கியுள்ளனர். மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில் மனமுடைந்து காணபட்ட திவ்யா வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக திவ்யாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல… யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 அல்லது ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website