காமெடி நடிகர் கருணாகரனின் தந்தை மரணம்! திரையுலகினர் இரங்கல்..!
பிரபல காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் மிகப் பெரிய சோகம் நிகழ்ந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் கருணாகனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான கருணாகரன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’லிங்கா’ தனுஷ் நடித்த ’தொடரி’ அஜித் நடித்த ’விவேகம்’ உள்பட பல பிரபலங்களின் படங்களில் கருணாகரன் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் சூர்யாவின் 44 வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் கருணாகரனின் தந்தை காளிதாஸ் என்பவர் இன்று காலமானார். 77 வயதாகும் அவர் கேபினட் செயலக அதிகாரியாக 37 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து கருணாகரன் தனது சமூக வலைத்தளத்தில் ’தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை என்று உயிர் இழந்தார்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் கருணாகரன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.