கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை நெருங்கிய விராட் கோலி
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடர் இம்மாதம் 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனை (53 இன்னிங்சில் 2,535 ரன்கள்) இந்த தொடரின் மூலம் முறியடிக்கப்படும். இந்த நிலையில், இங்கிலாந்தின் மூத்த பேட்ஸ்மேன் ஜோரூட் (45 இன்னிங்சில் 2,526 ரன்), டீம் இந்தியாவின் பேட்ஸ்மேன் விராட் கோலி (1991 ரன் 50 இன்னிங்ஸ்) ஆகியோர் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ரூட் 10 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையை முறியடிப்பார்.