சிறுநீரை கட்டுப்படுத்தும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே இயற்கையாக நடைபெறும் எந்த விடயத்தை கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் இது பெரும் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் உடலில் நடைபெரும் இயல்பான விடயம் தான் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவது. சிறுநீர் கழிக்க வேண்டும் என மூளை சமிஞ்சை கொடுத்த பின்னரும் அதனை கட்டுப்படுத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் காணப்படுகின்றது.இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது என்றும் இதனால் பல்வேறு உடல்நல பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதக விளைவுகள்
சிறுநீர்ப்பை பலூன் போன்றது. இதில் சிறுநீர் நிரம்பியவுடன் நிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தேவை உடலுக்கு ஏற்படுகின்றது.
இப்போது அதனை நாம் கட்டுப்படுத்தி வைக்க முயற்சித்தால் சிறுநீர்ப்பை விரிவடைய ஆரம்பிக்கும் இதனால் சிறுநீர் சுவர்களில் அழுத்தம் ஏற்படும். இது சிறுசீரகத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட காரணமாக அமையும்.
இவ்வாறு சிறுநீரை அடிக்கடி கட்டுப்படுத்தி வைத்தால் சிறுநீர் பாதையில் கிருமி தொற்றுக்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.
இது மட்டுமன்றி சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றது. குறிப்பாக சிறுநீர்ப்பை என்பது ஒரு தசை. அதனை காலி செய்ய வேண்டும் என்ற நிலையில் அதனை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. இதனால் சிறுநீரக தசைகள் பாதிப்படையும்.
சிறுநீரை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தி வைப்பதனால் சிறுநீரகத்தின் கட்டுப்படுத்தும் திறன் முற்றிலும் இல்லாமல் போக நேரிடும்.மேலும் சிறுநீர்ப்பையானது இயற்கையான முறையில் தன்னை காலி செய்து கொள்ளக்கூடிய திறனையும் இழந்துவிடும். இதனால் சிறுநீரக செயலிழப்பு அபாயம் அதிகரிக்கின்றது.